ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா |

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் ஏப்ரல் 28ம் தேதி ஐந்து மொழிகளில் தியேட்டர்களில் வெளியான படம் 'பொன்னியின் செல்வன் 2'.
சுமார் 300 கோடி ரூபாய் வசூலைக் கடந்த இந்தப் படம் கடந்த வாரம் அமேசான் ஓடிடி தளத்தில் தனி கட்டணம் செலுத்தி பார்க்கும் முறையில் வெளியானது. இப்போது அமேசான் சந்தாதார்கள் தனி கட்டணம் செலுத்தாமல் பார்க்கும்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டும் வெளியாகியுள்ளது. ஹிந்தி மொழியில் எப்போது வெளியாகும் என்பது தெரியவில்லை.
கல்கி எழுதிய நாவலை இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக மணிரத்னம் இயக்கியிருந்தார். முதல் பாகம் 2022ம் வருடம் செப்டம்பர் மாதம் வெளியாகி 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதன்பின் ஒரு மாதம் கழித்து ஓடிடி தளத்தில் வெளியானது. இப்போது படத்தின் இரண்டு பாகங்களும் ஓடிடி தளத்தில் உள்ளதால் ரசிகர்கள் எப்போது வேண்டுமானாலும் இரண்டு பாகங்களையும் பார்த்து ரசிக்கலாம்.