ரஜினியின் ஜெயிலர் 2 வில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | மகாராஜா படத்தால் அனுராக்கிற்கு ஆஸ்கர் இயக்குனரிடம் வந்த அழைப்பு | ஏழு மலை ஏழு கடல் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரீ ரிலீஸ் ஆகும் ரஜினி முருகன் | ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் டெஸ்ட் | கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி உடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய விஜய் | கேம் சேஞ்சர் படத்தின் ரிசல்ட் ஏமாற்றம் அளிக்கிறது : இயக்குனர் ஷங்கர் | அனுஷ்காவின் காதி படத்தில் முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபு | பெரிய படங்ளை வாங்கிய ஓடிடி நிறுவனம் | நட்புக்காக கெஸ்ட் ரோலில் நடித்ததுடன் சக்சஸ் மீட்டிலும் கலந்து கொண்ட மம்மூட்டி |
தமிழ்த் திரையுலகத்தில் கடந்த ஐந்து மாதங்களில் அதிகப் படங்களில் நடித்தவர் என்ற பெருமையைப் பெறுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் கதாநாயகியாக நடித்துள்ள ஐந்தாவது படமான 'தீராக் காதல்' படம் நாளை வெளியாக உள்ளது.
இதற்கு முன்பு இந்த ஆண்டில் அவர் நடித்த 'தி கிரேட் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன்' ஆகிய படங்கள் பிப்ரவரி 3ம் தேதி வெளியாகின. அடுத்து ஏப்ரல் 14ம் தேதி 'சொப்பன சுந்தரி' படமும், மே 12ம் தேதி 'பர்ஹானா' படமும் வெளிவந்தன. இந்த மாதத்தில் ஐஸ்வர்யா நடித்து வெளிவரும் இரண்டாவது படம் 'தீராக் காதல்'.
ஒவ்வொரு படத்திலும் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யாவின் நடிப்பு படத்திற்குப் படம் வளர்ந்து வருகிறது. மற்ற முன்னணி நடிகைகளைக் காட்டிலும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வருவதால் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் தொடர்ந்து பாராட்டைப் பெற்று வருகிறார் ஐஸ்வர்யா. நாளை வெளியாக உள்ள 'தீராக் காதல்' படத்திலும் அவரது கதாபாத்திரமும், அதில் அவரது நடிப்பும் சிறப்பாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.