டிஆர்பி-யில் சிரஞ்சீவி, பிரபாஸை பின்தள்ளிய சிவகார்த்திகேயன்! | தெலுங்கில் மந்தமான வசூலில் அஜித்தின் விடாமுயற்சி! | சிப்பாய் விக்ரம் இல்லாமல் அமரன் வெற்றி முழுமை பெறாது! - ராஜ்குமார் பெரியசாமி | இளையராஜா பயோபிக் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | ஜூலை மாதம் மீண்டும் வருகிறது டைனோசர் | உயர்ந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பேன் : சஞ்சனா நடராஜன் | எனது உற்சாகத்திற்கு காரணம் கிரியா யோகா : ரஜினி | 'விடாமுயற்சி' படம் பார்த்த அனிருத்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் | பிளாஷ்பேக் : பாதை மாறி தோற்ற எஸ்.ஏ.சந்திரசேகர் | பிளாஷ்பேக் : சின்ன படம், பெரிய வெற்றி: 80 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஹரிதாஸ்' |
2023ம் ஆண்டு தீபாவளிக்கான தமிழ்ப் படங்களின் வெளியீடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டி அதிகரித்து வருகிறது. இதற்கு முன்பு 'அயலான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' ஆகிய படங்கள் தீபாவளி வெளியீடு என அறிவிக்கப்பட்டன. தற்போது 'ஜப்பான்' படமும் தீபாவளி வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜு முருகன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையமைப்பில், கார்த்தி, அனு இம்மானுவேல், சுனில் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். கார்த்தியின் 25வது படமாக இது உருவாகி வருகிறது. இன்று கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். புதிய போஸ்டருடன் தீபாவளி வெளியீடு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
மேலும், யார் 'ஜப்பான்'? என்பது பற்றிய வீடியோ அறிவிப்பொன்றையும் இன்று காலை சிம்பு மூலம் வெளியிட்டனர். 'ஜப்பான்' மேட் இன் இந்தியா என்ற வசனம் கவனம் ஈர்த்துள்ளது. வித்தியாசமான வேடத்தில் கார்த்தி நடித்திருப்பது அந்த வீடியோவின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீதி மற்றும் பலர் நடிக்கும் 'அயலான்', மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, நிமிஷா சஜயன் மற்றும் பலர் நடிக்கும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' ஆகியவை தீபாவளிக்கு அறிவிக்கப்பட்டுள்ள மற்ற படங்கள்.