மாதவனின் டெஸ்ட் போட்டி ரசிகர்களை ஈர்க்குமா? | ஒரு வருடத்திற்குப் பிறகு ஓடிடியில் 'லால் சலாம்' | திரையரங்கை தொடர்ந்து ஓ.டி.டி.,க்கு வரும் பெருசு | குட் பேட் அக்லி முதல் காட்சி எப்போது? : சிறப்பு காட்சிக்கு அனுமதி உண்டா | சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் |
விஜய் - வெங்கட்பிரபு கூட்டணியின் 'விஜய் 68' படம் திடீரென அறிவிக்கப்பட்ட ஒன்றாகவே சமூக வலைத்தளங்களில் பார்க்கப்பட்டு வருகிறது. தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மல்லினேனி இயக்கத்தில்தான் விஜய் அடுத்து நடிக்கப் போகிறார் என்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது. அப்போதுதான் திடீரென விஜய் - வெங்கட்பிரபு கூட்டணி பற்றிய தகவல் வெளியாகி அடுத்த சில நாட்களில் படம் பற்றிய அறிவிப்பும் வெளிவந்துவிட்டது.
இந்நிலையில் விஜய்யை சந்தித்தது பற்றிய பதிவொன்றை வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார். அதில், “என்னை நம்பியதற்கு நன்றி விஜய்ணா. உங்களிடம் செய்த சத்தியத்தின்படி இந்த புகைப்படத்தை பட அறிவிப்புக்குப் பிறகே வெளியிடுகிறேன். புகைப்படம் 10 மாதங்களுக்கு முன்பு எடுத்தது. விஜய் 68, வெங்கட் பிரபு 12, ஆம், கனவு நனவானது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
'கஸ்டடி' என்ற தோல்விப் படத்தைக் கொடுத்த வெங்கட்பிரபு படத்தில் விஜய் நடிக்க சம்மதித்தது பற்றி சிலர் விமர்சித்திருந்தார்கள். அப்படம் பாதி உருவாக்கத்தில் இருந்த போதே தான் விஜய் - வெங்கட்பிரபு சந்தித்துப் பேசி 'விஜய் 68' படம் பற்றி பேசி முடிவெடுத்திருக்கிறார்கள். 'மங்காத்தா, மாநாடு' போன்ற பெரும் வெற்றிப் படத்தை வெங்கட்பிரபு கொடுப்பார் என்ற நம்பிக்கையில்தான் விஜய் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருப்பார். அந்த நம்பிக்கையைப் பற்றித்தான் தனது பதிவிலும் வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார்.