ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகை குஷ்பு இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர். இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்த பிறகு இந்து மத வழிபாட்டில் தீவிரம் காட்டி வருகிறார். தற்போது பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். எப்போதும் இந்து கலாச்சார முறைப்படியே பொதுவெளியிலும் காட்சி அளித்து வருகிறார். சமீபத்தில் திருமணத்திற்காக மதம் மாறியதாக எழுந்த சர்ச்சையின்போது அதற்கு நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி பதிலும் சொல்லி இருந்தார். தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றார்.
சமீபத்தில் கேரளா சென்ற குஷ்பு அங்குள்ள ஒரு கோயிலில் வழிபாடு நடத்தி அந்த படத்தை வெளியிட்டு. “இந்த கோயில் எனது தாயின் மாமனார் கட்டியது” என்று குறிப்பிட்டுள்ளார். குஷ்பு தன்னை முழுமையான இந்த பெண்ணாக அடையாளப்படுத்திக் கொண்டதற்கு சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.