வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் | சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த் | ‛குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை | ரஜினி, கமல் பட இயக்குனர் யார்? இன்னும் தீராத சந்தேகம் |
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்குள்ளாகவே விஜய்யின் 68வது படம் பற்றிய அறிவிப்பு நேற்று திடீரென வெளியானது. கடந்த வாரம் முழுவதும் அப்படத்தைப் பற்றி பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. இந்நிலையில் நேற்று ஒரு 'குறுக்கெழுத்து போட்டி'யுடன் கூடிய வீடியோவுடன் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டார்கள்.
விஜய், வெங்கட் பிரபு கூட்டணி முதல் முறை இணையும் படம், விஜய், யுவன் கூட்டணி இருபது வருடங்களுக்குப் பிறகு இணையும் என சில சிறப்புகள் இந்தப் படத்திற்கு உள்ளது. படத்தின் கதாநாயகி, மற்ற நடிகர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய கூட்டணிக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். 90ஸ் கிட்ஸ் பலருக்கும் அஜித் - யுவன் கூட்டணி எப்படி இருந்தது என்பது தெரியும். ஆனால், விஜய் - யுவன் கூட்டணி அவர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'மங்காத்தா' படம் மூலம் அஜித்திக்கு பெரிய திருப்புமுனையைத் தந்தவர் வெங்கட் பிரபு. விஜய் அடுத்தடுத்து சில சூப்பர்ஹிட்களைக் கொடுத்து உச்சத்தில் இருக்கிறார். விஜய்யை அவர் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் காட்டப் போகிறார், அதற்கு யுவனின் பின்னணி இசை எப்படி இருக்கும் என ரசிகர்கள் பலரும் இப்போதே தங்களது எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.