'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பாலிவுட்டில் பிரபல இயக்குனரும், நடிகருமாக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். தமிழில் இமைக்கா நொடிகள் என்கிற படத்தில் வில்லனாக நடித்தவர் இவர்தான். இவர் இயக்கியுள்ள கென்னடி என்கிற திரைப்படம் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக கலந்து கொண்டது. இந்த படத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் ராகுல் பட் என்பவர் நடித்துள்ளார். ஆனால் இந்த படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அனுராக் காஷ்யப் முதலில் அழைத்தது நடிகர் விக்ரமை தான்.
இதுகுறித்து தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ள அனுராக் காஷ்யப், "இந்த முன்னாள் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து அவரிடம் இந்த கதையை கூறினேன். அதற்காக விக்ரமின் ஒரிஜினல் பெயரான கென்னடி என்கிற பெயரையே இந்த படத்திற்கு டைட்டிலாகவும் வைத்தேன்" என்று கூறியுள்ளார். ஆனால் விக்ரமிடமிருந்து சாதகமான பதில் எதுவும் கிடைக்காததால் தான் அவருக்கு பதிலாக நடிகர் ராகுல் பட்டை வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளாராம் அனுராக் காஷ்யப்.