டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

உலக புகழ்பெற்ற 'மார்டன் லவ்' வெப் தொடர் தற்போது தமிழில் தயாராகி உள்ளது. இதனை இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா ஒருங்கிணைத்துள்ளார். ஏற்கெனவே 'மார்டன் லவ்' தொடரில் புகழ்பெற்ற கதைகளை கொண்டு இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. பாரதிராஜா, ராஜு முருகன், பாலாஜி சக்திவேல், கிச்சா அக்ஷய் சுந்தர், பாலாஜி தரணிதரன் ஆகியோர் இயக்கி உள்ளனர். அமேசான் தளத்தில் வெளியாகிறது.
இதன் அறிமுக விழா நடந்தது. இதில் பாரதிராஜா பேசியதாவது: இந்தப்படம் எனக்கு புதிய அனுபவம். இந்தபடம் வழக்கமான சினிமாவிலிருந்து தனித்து நிற்கிறது. இந்த படத்தின் கதைகள் அனைத்தும் காதலை மையமாக கொண்டது. காதல் ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கும்.
நான் காதல் செய்யவில்லை என்றால் கலைஞனாகியிருக்க முடியாது. எவன் ஒருவன் காதலை அழகாக சொல்கிறானோ அவன் தான் உண்மையான கலைஞன். நான் 85 வயதிலும் காதலிக்கிறேன் என்பதை தைரியமாகச் சொல்வேன். என்னைப் பொறுத்தவரை காதல் இல்லையென்றால் வாழ்க்கை இல்லை. 9வது படிக்கும்போது எனக்கு ஒரு காதலி இருந்தாள். பின், சென்னை வந்து இத்தனை ஆண்டுகளில் இதுவரை நான்கு காதல்களைக் கடந்துவிட்டேன்.
என்னை எல்லோரும் அன்னாந்து பார்க்கிறார்கள். நான் இன்றைய இளம் இயக்குனர்களை அதைவிட அன்னாந்து பார்க்கிறேன். நான் அவர்களுடன் போட்டியிடுவேன். என்னாலும் இன்றைய காலச் சூழலுக்கு ஏற்ப படம் எடுக்க முடியும் என்பதை நிரூபிப்பேன். 85 வயதாகிறது எனது உடல்நிலை ஒத்துழைத்தால் அதனை சாதித்துக் காட்டுவேன் என்றார்.