விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' | 2 நாட்களில் ஐந்து மில்லியன் பார்வைகளை கடந்த திரிஷாவின் ‛தி ரோடு' டிரைலர்! | 'சந்திரமுகி 2' வெளியீடு தள்ளிப் போனது ஏன் ? | ஸ்கந்தா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! | ஹாலிவுட் பட வாய்ப்பு - அட்லீ! | 7ஜி பிருந்தாவன் காலனி படத்தின் ரீ - ரிலீஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்! | கோட் சூட் லுக்கில் அஜித்தின் புதிய போட்டோ வைரல்! |
இந்திய சுதந்திரத்திற்காக ஆயுதம் ஏந்தி போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மரணம் குறித்த ரகசியங்களை அடிப்படையாக கொண்டு 'ஸ்பை' என்ற பெயரில் திரைப்படமாக தயாராகிறது. பிரபல பட தொகுப்பாளரான கேரி பி ஹெச் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தை ஈடி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் எனும் நிறுவனம் சார்பில் கே.ராஜசேகர் ரெட்டி தயாரிக்கிறார்.
இதில் நாயகனாக நிகில் நடிக்கிறார். நிகிலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனனும், இரண்டாவது நாயகியாக சானியா தாக்கூரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஆரியன் ராஜேஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் அபிநவ் கோமடம், மகரந்த் தேஷ் பாண்டே, ஜிஷு செங் குப்தா, நித்தின் மேத்தா, ரவி வர்மா, கிருஷ்ண தேஜா, பிரிஷா சிங்,, சோனியா நரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வம்சி பட்சிபுளுசு மற்றும் மார்க் டேவிட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீ சரண் பக்கலா மற்றும் விஷால் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
இந்த படத்தின் டீசர் டில்லி கர்தவ்யா பாதையில் அமைந்திருக்கும் சுபாஷ் சந்திர போஸ் சிலை அருகே வருகிற 15ம் தேதி வெளியிடப்படுகிறது. ஆக்ஷன் கலந்த ஸ்பை த்ரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் கதையை தயாரிப்பாளர் கே. ராஜசேகர் ரெட்டி எழுதி இருக்கிறார். மேலும் இந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து இந்திய மொழிகளில் ஜூன் மாதம் 29 ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்த படத்தில் சுபாஷ் சந்திரபோசின் முழு வாழ்க்கையும் இடம்பெறவில்லை. அவர் இளைஞராக இருந்தபோது செய்த ஒரு சாதனை நிகழ்வை மையமாக வைத்து தயாராகிறது.