2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

கடந்த சில நாட்களாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக தகவல் பரவியது. இதற்கு காரணம் லியோ படத்திற்கு திரைக்கதை எழுதி வரும் வரும் ரத்னகுமார் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி அணிந்திருந்த கண்ணாடியை பகிர்ந்திருந்தார். இதை வைத்து இந்த தகவல்கள் பரவியது. இதனை தற்போது விஜய்சேதுபதி மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: லியோ படத்தில் நான் நடிக்கவில்லை. தயவு செய்து இதுகுறித்த வதந்திகளை பரப்ப வேண்டாம். ரத்னகுமார் எதற்காக அந்த கண்ணாடி படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்தார் என்று எனக்குத் தெரியாது. லியோ படத்தில் நான் நடிப்பதாக ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். ஒவ்வொருத்தருககும் என்னால் தனித்தனியாக பதில் சொல்ல முடியாது. அதனால் இந்த விளக்கத்தை அளிக்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.