கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
70களின் இறுதியில் தமிழ் மற்றும் தெலுங்கில் கதாநாயகனாக, வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சுமன். குறிப்பாக தீ என்கிற படத்தில் ரஜினிகாந்தின் தம்பியாக நடித்து பிரபலமான இவர், ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கி பின்னர் மீண்டும் அதே ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் வெற்றிகரமாக தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கினார். அதைத் தொடர்ந்து தற்போது வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தனக்கு பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் 1999ல் தெலுகு தேசம் கட்சி மூலமாக அரசியலில் நுழைந்தார். அதன் பிறகு அங்கிருந்து விலகி 2005ல் பாஜகவில் இணைந்தார். தனக்கான பதவி மரியாதை எதுவும் கிடைக்கவில்லை என அங்கிருந்தும் விலகி, அதன்பின் அரசியலை விட்டு பல வருடங்களாக ஒதுங்கி இருந்து வந்தார் சுமன்.
அடுத்த வருடம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தெலுங்கானாவில் உள்ள பாரத் ராஷ்டிர சமிதி என்கிற கட்சிக்கு தனது ஆதரவை தரப்போவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தற்போது வெளிப்படையாகவே கூறியுள்ளார் நடிகர் சுமன். மீண்டும் அவர் தெலுங்கு தேசம் கட்சியிலேயே தன்னை இணைத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு மாறாக அவர் கூறியுள்ளது ஆந்திர அரசியலில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.