அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் | குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? | மகனுக்காக திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்த பவன் கல்யாண் மனைவி | 6 மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன் | குஞ்சாக்கோ போபன் - பாவனா எதிர்பாராத சந்திப்பு | ஹிந்தி படத்தில் கரீனா கபூருக்கு ஜோடியாக இணைந்த பிரித்விராஜ் | இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் | ஒரே நாளில் 3 படங்கள் ; மூன்றிலும் வீணடிக்கப்பட்ட வில்லன் நடிகர் | ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
மலையாளத்தில் அறிமுகம் ஆகி பின்னர் தமிழ் திரை உலகுக்கு வந்து தனது இயல்பான நடிப்பால் இங்குள்ள ரசிகர்களை கவர்ந்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளவர் நடிகை நிகிலா விமல். கடந்த வருடம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'வாழை' திரைப்படமும் குறிப்பாக அந்த படத்தில் இவர் ஆடிய பஞ்சுமிட்டாய் சேலை கட்டி பாடலுக்கான நடனமும் என எல்லாமாக சேர்ந்து இவருக்கு இன்னும் அதிகப்படியான ரசிகர்களை தேடி தந்துள்ளது.
இந்த நிலையில் மலையாள நடிகர் உன்னி முகுந்தனுக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ள 'கெட் செட் பேபி' என்கிற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் நிகிலா விமல். முன்னதாக உன்னி முகுந்தன் தயாரித்து நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'மேப்படியான்' என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்க அழைத்த போது மறுத்துவிட்டவர் தான் நிகிலா விமல். காரணம் அந்த படத்தில் தனக்கான கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் இல்லை என்பதால் மறுத்து விட்டேன் என்று கூறி அப்போது பரபரப்பையும் ஏற்படுத்தினார். அதன் பிறகு மீண்டும் அதே உன்னி முகுந்தனுடன் இணைந்து இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
உன்னி முகுந்தன் பற்றி நிகிலா விமல் கூறும்போது, “சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான 'மார்கோ' திரைப்படம் மிகுந்த வன்முறை காட்சிகளுடன் வெளியாகி இருந்தது. நான் இயல்பிலேயே அதிக வன்முறை காட்சிகள் கொண்ட படத்தை பார்ப்பவள் அல்ல என்பதால் அந்த படத்தை பார்க்கவில்லை. அதே சமயம் அந்த படத்தில் காணப்படும் அவரது கதாபாத்திரத்திற்கும் நிஜத்தில் பார்க்கும் உன்னி முகுந்தனுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் எப்போதும் படம் தொடர்பான பேச்சுக்களே இருக்கும். படத்திற்காக கடுமையான உடற்பயிற்சி செய்து தன்னை வருத்திக் கொள்வது, கண்டிப்பான டயட்டை பின்பற்றுவது என படத்தின் வெற்றியை நோக்கியே தான் எப்போதுமே அவரது எண்ணம் இருக்கும்” என்று கூறியுள்ளார்.