மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் தனுஷ். நடிப்பு மட்டுமின்றி இயக்கம் மற்றும் தயாரிப்பு என பிசியாக இருக்கும் அவர் முழுக்க முழுக்க புது முகங்களை வைத்து நிலவுக்கு என்னடி என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் 21ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் புதுமுக நடிகர்கள் தேடப்படுவதாக போலியாக விளம்பரம் செய்யப்பட்டு மோசடி நடைபெறுவதாக அவரின் தயாரிப்பு நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருக்கும் ஸ்ரேயஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‛‛எனது பெயரிலோ அல்லது வுண்டர்பார் பிலிம்ஸ் பெயரிலோ வரும் எந்தவொரு நடிகர், நடிகைகளுக்கான அழைப்புகளும் முற்றிலும் போலியானவை மற்றும் ஆதாரமற்றவை என்பதை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வருவதற்காக இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுமுகங்களை வைத்து நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் படத்தை தனுஷ் எடுத்துள்ளதால், அடுத்து நடிகர் தனுஷ் தயாரித்து இயக்க உள்ள படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படும் என சொல்லி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.