இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தமிழ் சினிமாவின் இரட்டை இயக்குனர்கள் ஆன புஷ்கர் மற்றும் காயத்ரி எழுத்தில் உருவான சுழல் வெப் தொடர் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 வெப் தொடரை பிரம்மா மற்றும் சர்ஜுன் இயக்கியுள்ளனர்.
எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடரில், கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க,அவர்களுடன் லால், சரவணன், கௌரி கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன், மோனிஷா பிளெஸ்ஸி ரினி, ஷ்ரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், கலைவாணி பாஸ்கர், மற்றும் அஸ்வினி நம்பியார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். நடிகை மஞ்சிமா மோகன் மற்றும் நடிகர் கயல் சந்திரன் ஆகியோர் கவுரவ வேடத்தில் தோன்றுகின்றனர்.
இந்தத் தொடரை வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரைம் வீடியோவில் பிப்ரவரி 28 அன்று பிரத்தியேகமாகத் திரையிடப்படத் தயாராக உள்ள இந்த சுழல்-2 வெப் தொடர் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள 240 க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிடப்படுகிறது. தற்போது இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுகுறித்து தொடரின் இயக்குனர்கள் கூறுகையில், காளிபட்டணம் என்ற கற்பனை கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அஷ்டகாளி திருவிழாவின் பின்புலத்தில் படத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த கிராமத்தின் மூத்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான லால் மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட அந்தச் சம்பவம், கிராம மக்களை திடுக்கிடச் செய்து முழு கிராமத்தையும் தலை கீழாகப் புரட்டிப்போடுகிறது. மர்மங்கள் நிறைந்த இனம் புரியாத இந்தக் குற்றத்தின் புதிரை எப்படி கதிர் கண்டுபிடிக்கிறார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ்சின் பங்கு என்ன என்பதை கொஞ்சம் கூட சுவாரஸ்யம் குறையாமல் சொல்லி உள்ளோம் என்றனர்.