'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
கார்த்திகி கொன்சால்வெஸ் இயக்கத்தில் உருவான 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணக் குறும்படம் ஆஸ்கர் விருது வென்றது. அப்படத்தில் யானை வளர்ப்பாளர்களாக நடித்த கணவன், மனைவியான பொம்மன், பெல்லி ஆகியோரை இந்தியப் பிரதமர் மோடியும் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று, சென்னை சூப்பர் கிங்ஸ் குழுவினர் படக் குழுவினரை அழைத்து பாராட்டி பெருமைப்படுத்தியுள்ளனர். பொம்மன், பெல்லி ஆகியோருக்கு தனது எண் பதிவிட்ட ஜெர்ஸியை வழங்கி கௌரவித்தார். இன்று டெல்லி அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியிலும் சிறப்புப் பாராட்டு விழா ஒன்றையும் நடத்த உள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு யானைகள் நலனுக்கான நன்கொடையையும், படத்தில் பங்கேற்ற அம்மு, ரகு யானைகளுக்கான அன்றாட செலவுகளுக்கான தொகையையும் வழங்க உள்ளார்கள்.