''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பணியாற்றி வந்த பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி மற்றும் குட்டி யானைகள் ரகு, பொம்மியை வைத்து 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப்படத்தை கார்த்திகி கோன்ஸ்சால்வ்ஸ் என்ற பெண் இயக்குனர் இயக்கினார்.
இந்த ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்வர் உள்ளிட்ட பலரும் பாராட்டினார்கள். சமீபத்தில் பாகன் தம்பதிகளை ஜனாதிபதி முதுமலையில் சந்தித்து பேசினார். தமிழக அரசு அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கியது. இந்த நிலையில் பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளி படத்தை இயக்கிய கார்த்திகி தங்களுக்கு பணம் தராமல் ஏமாற்றி விட்டதாக பரபரப்பு புகார் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது: ஆவணப்பட இயக்குனர், எங்களுக்கு வீடு, கார் மற்றும் வங்கி கணக்கில் பணம் செலுத்துவதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தார். ஆனால், இதுவரை எங்களது வங்கி கணக்கில் எந்தத் தொகையும் வரவில்லை. கார் மற்றும் வீடு வழங்கவில்லை. இதுவரை அந்த இயக்குனரை எங்களது செல்போனில் அழைத்தாலும் எடுப்பதில்லை.
நாங்கள் படத்தில் நடிக்க இயக்குநர் பணம் தரவில்லை. திருமண காட்சியை படமாக்க தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். எனவே, எங்கள் பேத்தியின் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து சூட்டிங் செலவுக்குக் கொடுத்தோம். இயக்குநர் அந்தப் பணத்தை இன்னும் திருப்பி தரவில்லை. திரைப்படத்தின் மூலம் நாங்கள் பெற்றதெல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு வழங்கிய 1 லட்சம் மட்டுமே .
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக படத் தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ஆஸ்கர் விருதை வெல்வது பணத்தின் அடிப்படையிலான பாராட்டு அல்ல. அது திரைப்படத் தயாரிப்பின் சிறப்பிற்கான அங்கீகாரம் ஆகும். யானைகளைப் பாதுகாப்பதையும், வனத்துறை மற்றும் பாகன் தம்பதி பொம்மன் மற்றும் பெள்ளியின் மகத்தான வாழ்க்கையையும் முன்னிலைப்படுத்துவதே 'தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்' உருவாக்கத்தின் குறிக்கோள். ஆவணப்படம் வெளியானதிலிருந்து பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. பாகன் தொழில் செய்பவர்கள் மத்தியில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தியது பாகன் தம்பதிகளுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்பட்டுவிட்டது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.