ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
கிழக்கிந்திய வியாபார கம்பெனி என்ற பெயரில் இந்தியாவுக்குள் ஆங்கிலேயர்கள் நுழைந்த போது அவர்களை எதிர்த்து போரிட்டவர்களில் தமிழகத்தை சேர்ந்த முக்கியமானவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.
கட்டபொம்மன் வரலாறு தெருக்கூத்தாகவும் கிராமிய பாடலாகவும் செவிவழி கதைகளாகவுமே இருந்தது. தென் மாவட்டத்து மக்கள் கட்டபொம்மனை கடவுளாகவே வணங்கி வந்தார்கள். இந்த கதைகளையும், பாடல்களையும் ஒருங்கிணைத்து வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றை திரைப்படமாக எடுக்க பலரும் முயற்சித்தார்கள்.
1948ல், செல்வம் பிக்சர்ஸ் என்று தயாரிப்பு நிறுவனம் கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாற்றைத் தயாரிக்க போவதாக அறிவித்தது. கட்டபொம்மனாக பி.யு. சின்னப்பா நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, திட்டம் இறுதியில் கைவிடப்பட்டது.
1953ம் ஆண்டில், எஸ்.எஸ்.வாசனின் இயக்கத்தில் ஜெமினி ஸ்டுடியோஸ் 'கட்டபொம்மன்' என்ற தலைப்பில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாற்றை உருவாக்கும் திட்டத்தை வெளியிட்டது. கொத்தமங்கலம் சுப்புவும், வேப்பூர் கிட்டுவும் கதை மற்றும் திரைக்கதையை வடிவமைக்க நியமிக்கப்பட்டனர். வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய தகவல்களைத் தருபவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும் என பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது. என்றாலும் கட்டபொம்மனின் வரலாற்றை முழுமையான திரைக்கதையாக்க முடியாமல் அந்த திட்டமும் கைவிடப்பட்டது.
இறுதியாக சக்தி கிருஷ்ணசாமியும், பூமா பாலகிருஷ்ணனும் இணைந்து எழுதிய கதை, வசனத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் தயாரானது. தனது பத்மினி பிக்சர் சார்பில் பி.ஆர். பந்துலு தயாரித்து, இயக்கி வெளியிட்டார். வீரபாண்டிய கட்டபொம்மனாக சிவாஜி கணேசன் நடித்தார். அன்றைய தேதியில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் வண்ணத் திரைப்படமாக உருவானது. இப்படம் தமிழ்நாட்டின் பார்வையாளர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் பலமாக எதிரொலித்தது. மதுரை நியூ சினிமா உட்பட ஏராளமான திரையரங்குகளில் 175 நாட்களைக் கடந்து வெள்ளி விழா கொண்டாடியது. தமிழ் சினிமாவின் மைல் கல்லாகவும் இந்தப் படம் அமைந்தது.