இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

தமிழ் சினிமா பாடல்களில் 1500 மில்லியன் பார்வைகளைக் கடந்து முதலிடத்தில் உள்ளது 'ரவுடி பேபி'. யுவன்ஷங்கர் ராஜா இசையில் தனுஷ், தீ பாடிய அந்தப் பாடல் தற்போது 1573 மில்லியன்களைக் கடந்து யு டியுபில் தற்போதும் தினமும் லட்சக்கணக்கான பார்வைகளுடன் ரசிக்கப்பட்டு வருகிறது.
அந்தப் பாடலுக்குப் பிறகு 'பீஸ்ட்' படப் பாடலான 'அரபிக் குத்து' பாடல் 621 மில்லியன் பார்வைகளைக் கடந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. அனிருத் இசையமைத்து ஜோனிதா காந்தியுடன் இணைந்து பாடிய பாடல் இது.
தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த பாடல்களில் 'ரவுடி பேபி மற்றும் அரபிக் குத்து' ஆகிய பாடல்கள் மட்டுமே 600 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடலாக இருந்தது. அந்த வரிசையில் தற்போது 'எனிமி' படப் பாடலான 'டம் டம்' பாடல் இணைந்துள்ளது.
தமன் இசையமைப்பில், ஸ்ரீவர்த்தினி, அதிதி, சத்யா யாமினி, ரோஷினி, தேஜஸ்வனி ஆகியோர் பாடிய 'டம் டம்' பாடல் எந்த பரபரப்பும் இல்லாமல் 600 மில்லியன் சாதனையைப் பெற்றுள்ளது.
'எனிமி' படத்தை ஆனந்த் சங்கர் இயக்க, விஷால் கதாநாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்க, மிர்ணாளினி ரவி, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் 2021ம் ஆண்டு வெளியானது.




