ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள சிவகார்த்திகேயன் அவரது சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். அவரது தயாரிப்பில், பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில், சூரி, அன்னா பென் மற்றும் பலர் நடிப்பில் ஆகஸ்ட் 23ல் வெளியாக உள்ள படம் 'கொட்டுக்காளி'.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று(ஆக., 13) சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் வெற்றிமாறன், மிஷ்கின், லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசிய போது, “கொட்டுக்காளி மாதிரி எஸ்கே புரொடக்ஷன்ஸ்ல இருந்து இன்னும் நிறைய படைப்புகள் வரும். நான் வந்து யாரையும் கண்டுபுடிச்சி, நான்தான் வாழ்க்கை கொடுத்தேன், இவங்களை நான்தான் ரெடி பண்ணேன் அந்த மாதிரிலாம் நான் சொல்ல மாட்டேன். ஏன்னா என்னை அப்படி சொல்லி சொல்லி பழக்கிட்டாங்க, நான்தான் வாழ்க்கை கொடுத்தேன்னு. அந்த மாதிரி ஆள் நான் இல்ல,” என்று பேசினார். அவரது இந்த வீடியோவை மட்டும் தனியாக 'கட்' செய்து சோஷியல் மீடியாவில் வைரலாகப் பரப்பி வருகிறார்கள்.
பாண்டிராஜ் இயக்கத்தில் வந்த 'மெரினா' படத்தில் சிவகார்த்திகேயன் அறிமுகமானாலும், அடுத்து சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும், 'எதிர் நீச்சல்' படம்தான் அவருக்கு தனி ஹீரோவாக முதல் பெரிய வெற்றியைத் தந்தது. அந்தப் படத்தை நடிகர் தனுஷ் தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயனின் இன்றைய பேச்சில் அவர் யாரைக் குறிப்பிட்டுள்ளார் என்பது ரசிகர்கள் அனைவருக்கும் புரிந்து அதை பலவிதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.