பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகை நிமிஷா சஜயன். தற்போது தமிழ் சினிமாவிலும் ஆழமாக கால் பதித்து வருகிறார். 'சித்தா', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படங்களில் நடித்த அவர் அடுத்து நடிக்கும் புதிய படம் 'என்ன விலை'. மலையாள இயக்குனர் சஜீவ் பழூர் இந்தப் படத்தை இயக்குகிறார். கருணாஸ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்கள் தவிர ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், விஜயலட்சுமி, பசுபதி ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆல்பி ஆண்டனி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சிஎஸ் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குநர் சஜீவ் பழூர் கூறும்போது, “என்ன விலை படம் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். குறிப்பாக, நிமிஷா சஜயன் போன்ற திறமையான பல நடிகர்கள் படத்தில் இருப்பதால் படப்பிடிப்பு மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன், நிமிஷா உடன் 'தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்' என்ற படத்தில் வேலை பார்த்துள்ளேன். ஆனால் இப்போது திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் இரண்டிலுமே அவரது பேக்-டு-பேக் ஹிட் கொடுத்து நடிகையாக அவர் உயர்ந்த இடத்தை அடைந்துள்ளார். என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வித்தியாசமான மற்றும் புதிய நிமிஷாவைக் காண்பிக்கும். முதல் ஷெட்யூல் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியில் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், இரண்டாவது ஷெட்யூல் எளிமையான பூஜையுடன் தொடங்கியுள்ளது. இம்மாத இறுதிக்குள் முழு படப்பிடிப்பும் முடிவடையும்" என்றார்.
நிமிஷா கூறுகையில், ‛‛சஜீவ் உடன் தான் எனது பயணத்தை ஆரம்பித்தேன். இப்போது அவர் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறேன். ஒரு பார்வையாளராக நானும் அவரது படத்தை காண ஆவலாய் உள்ளேன். இந்த படத்தில் நடிக்க காரணமே கதை தான். அதற்கு வலு சேர்க்கும் விதமாக எனது வேடம் அமைந்துள்ளது. படத்தில் எனக்கு அதிகமான வசனங்களும் உள்ளன. எனது கேரக்டர் பார்வையாளர்களுடன் ஒத்துப்போகும். தமிழ் சினிமாவில் இப்போது ஜாலியாக இருக்கிறேன். எனக்கு பலவிதமான கேரக்டர்கள் கிடைக்கின்றன. தமிழ், மலையாளம் என நான் பிரித்து பார்ப்பது இல்லை. என்னை பொருத்தவரையில் மக்கள் ஏதாவது புதிதாக வேண்டும் என நினைக்கிறார்கள். மொழியை பார்ப்பது இல்லை'' என்றார்.