ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
'பொன்னியின் செல்வன்' படத்தை தயாரிக்க பலரும் தயங்கி கைவிட்டதை போன்று, 18ம் நூற்றாண்டில் வெள்ளையர்களை எதிர்த்து வீர மரணம் அடைந்த வீரபாண்டிய கட்டபொம்மன் கதையை படமாக்கவும் தமிழ் சினிமா தயங்கியது. இதற்கு காரணம் படத்தின் பட்ஜெட்தான்.
வீரபாண்டிய கட்டபொம்மன் கதை என்பது செவி வழி பாடல்களாகத்தான் இருந்தது. அதை முழுமையாக எழுதியவர் ம.பொ.சி. அவர் எழுதியதன் அடிப்படையில் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' நாடகம் உருவாக்கப்பட்டது. அதில் சிவாஜி கட்டபொம்மனாக நடித்தார். பின்னர் அந்த நாடகத்தை சிவாஜி படமாக்க விரும்பினார். அவரால் இயலவில்லை. அதற்கும் முன்பாக அதாவது 1948ம் ஆண்டு செல்வம் பிக்சர்ஸ் நிறுவனத்தார் திரைப்படமாக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால், தொடக்க நிலையிலேயே அது கைவிடப்பட்டது. அதன் பிறகு 1953ம் ஆண்டு ஜெமினி பிக்சர்ஸ் எஸ்.எஸ் வாசன் முயற்சி மேற்கொண்டார். அந்த முயற்சியும் கைகூடவில்லை.
1959ம் ஆண்டு இயக்குனர் பி.ஆர்.பந்துலு தனது பத்மினி பிக்சர்ஸ் சார்பில் துணிந்து படத்தை தயாரித்தார். திட்டமிட்டதை விட மூன்று மடங்கு பட்ஜெட் ஆனது. காரணம் படத்தை வண்ணத்தில் எடுத்ததும், போர் காட்சிகளுக்கு நிறைய செலவு செய்ததுமாகும். பி.ஆர்.பந்துலுவுக்கு உதவும் விதமாக சிவாஜி தனது சொந்த பொறுப்பில் படத்தை வெளியிட்டார். படம் வெளிவந்து பெரிய வரவேற்பை பெற்றது. அதில் சிவாஜிக்கு பெரும் லாபம் கிடைத்தது. அதன் ஒரு பகுதியை பி.ஆர்.பந்துலுவுக்கு கொடுத்த சிவாஜி, பாஞ்சாலங்குறிச்சியில் சிவாஜிக்கு பிரமாண்ட சிலை அமைத்தார்.
இந்த படத்தில் சிவாஜியுடன் ஜெமினி கணேசன், பத்மினி, எஸ்.வரலட்சுமி, ராகினி, வீ.கே.ராமசாமி, ஜாபர் சீத்தாராமன், ஓஏகே தேவர், உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஜி.ராமநாதன் இசை அமைத்திருந்தார், வி.ஆர்.சுப்பாராவ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.