ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா | திரிஷா போன்ற அமெரிக்கா பெண் ஒருவர் என் மீது காதல் வயப்பட்டார் : நடிகர் பாலா புது தகவல் |
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக உள்ள தனுஷ், சினிமாவில் நடிகராக அறிமுகமாகி இன்றுடன் 21 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். 2022ம் ஆண்டு மே 10ம் தேதி அவர் கதாநாயகனாக நடித்த 'துள்ளுவதோ இளமை' திரைப்படம் வெளிவந்தது.
அப்படம் முடிந்த நிலையில் அதை யாரும் முன்வாங்க வரவில்லை. சில பல மாதங்களுக்குப் பிறகு படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. யுவனின் இசையில் அமைந்த சிறப்பான பாடல்கள் வெற்றிக்கு முக்கிய காரணம். தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளிவந்த அப்படத்தை செல்வராகவன் தான் இயக்கினார் என்று சொல்பவர்களும் உண்டு.
அப்படத்திற்குப் பிறகு “காதல் கொண்டேன், திருடா திருடி” என ஹாட்ரிக் வெற்றி கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடிக்க ஆரம்பித்தார் தனுஷ். பின்னர் சில தோல்விகள் வந்தாலும் 'புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி' என அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் அவருடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தின.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'ஆடுகளம்', அவரது களத்தையே மாற்றியமைத்தது. அப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார். பின்னர் ஹிந்தியில் 'ராஞ்சனா' படத்தில் அறிமுகமாகி 100 கோடி வசூலைப் பெற்றார்.
பிரஞ்ச் மொழியில் ஒரு படம், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஆங்கிலப் படம் என உலக அளவிலும் சென்றார். '3' படத்தின் 'ஒய் திஸ் கொலவெறி', 'மாரி 2' படத்தின் 'ரவுடி பேபி' பாடல் அவரை யு டியுப் தளத்தில் பெரிய சாதனையைச் செய்ய வைத்தது. 'அசுரன்' படத்திற்காக இரண்டாவது முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார்.
இந்த வருடம் 'வாத்தி' படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகி வெற்றியைப் பதித்தார். தற்போது அவர் நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' படம் உருவாக்கத்திலேயே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் அறிமுகமான காலங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்ட நடிகர்களாக ரஜினிகாந்த், விஜய், தனுஷ் ஆகியோர் இருந்தனர். அப்படி விமர்சித்தவர்களையே பாராட்ட வைக்கும் அளவிற்கு தங்களது சுய திறமையால் வளர்ந்தவர்கள் அவர்கள்.