லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் | தமிழ் ஹீரோ துன்புறுத்தினாரா...? - அப்படி சொல்லவே இல்லை என்கிறார் நித்யா மேனன் | பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா? | மீண்டும் ராஷ்மிகா உடன் இணையும் விஜய் தேவரகொண்டா | பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன் | ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது | 5 மொழிகளில் தயாராகும் 'பர்மா' | இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் |
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி இணைந்து நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார், சாய் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் 60 நாட்கள் நடக்கிறது.
இதுகுறித்து தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: பல்வேறு கலாச்சாரங்களுக்கு மத்தியில் நம் தேசத்தின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றைப் பேசும் படமாக இது இருக்கும். அதிரடி ஆக்ஷன்களுடன் புதுமையான கதைக் களத்தில் பயணிக்கும். ரசிகர்களுக்கு ஒரு நிறைவான அனுபவமாக இருக்கும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவக்க விழாவில் தயாரிப்பாளர்கள் கமல்ஹாசன், ஆர்.மகேந்திரன், இணை தயாரிப்பாளர் வக்கீல் கான், பொது மேலாளர் மற்றும் தலைவர் லாடா குருதேன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். படப்பிடிப்புகள் காஷ்மீரில் 60 நாட்கள் நடக்கிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.