பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
யாமினி பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள படம் "மியூசிக் ஸ்கூல்". இப்படம் வருகிற 12ம் தேதின்று வெளிவருகிறது. இதையொட்டி நடந்த படத்தின் அறிமுக விழாவில் ஸ்ரேயா பேசியதாவது:
சென்னை வருவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை ஷூட்டிங் பற்றி நிறைய இனிமையான தருணங்கள் நினைவுக்கு வருகிறது. இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மிக இனிமையான குணம் கொண்டவர். இப்படத்திற்கு ஷூட்டிங் செல்வது எனக்கு வீட்டுக்குப் போவது போல் தான் இருந்தது. எனக்கு மிகச்சிறந்த பெற்றோர்கள் இருந்தார்கள், என்னால் நான் நினைத்ததைச் செய்ய முடிந்தது. என் உறவினர்களில் பலர் வீட்டை விட்டு வெளியே வரவே நிறைய போராட வேண்டும். அதனால் இந்தக் கதையைக் கேட்ட போது அதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
இது கண்டிப்பாக சொல்லப்பட வேண்டிய கதை. இயக்குநர் மிகச் சிறப்பான முறையில் இதைத் திரையில் கொண்டுவந்துள்ளார். இளையராஜாவின் இசை எல்லோரையும் மயக்கும் வகையில் அமைந்துள்ளது. அவரது இசை வேறொரு உலகத்திற்கு உங்களை எடுத்துச் செல்லும். ஷர்மன் ஜோஷி நடிப்பை மும்பையில் வேறொரு ஷுட்டிங்கில் பார்த்துள்ளேன். அவருடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவம். இப்படத்தில் அனைவரும் மிகக்கடுமையாக உழைத்துள்ளார்கள்.
தமிழில் தற்போது நடிக்காததற்கு காரணம் வாய்ப்புகள் வரவில்லை என்பதுதான். வாய்ப்பு வந்தால் எப்போதும் நடிப்பேன். ஒரு பாடலுக்கு ஆடுவீர்களா என்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் ஆடுவேன். நான் ஆடுவதை ரசிப்பதால்தானே இந்த கேள்வி எழுகிறது. நீங்களே (பத்திரிகையாளர்கள்) தயாரிப்பாளர்களிடம் பேசி வாய்ப்பு வாங்கி கொடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.