‛கண்ணகி' படத்தின் டிரைலர் வெளியானது | இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் | கமல் உடன் இணைந்து நடிக்கும் கவுதம் கார்த்திக் | மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற விடாமுயற்சி படக்குழு | 3 படம் ரீ ரிலீஸ் குறித்து நெகிழ்ந்த தனுஷ் | பொங்கல் ரேஸிலிருந்து ஒதுங்கிய விஜய் தேவரகொண்டா படம் | யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது : கவனம் ஈர்க்கும் பைட் கிளப் டீசர் | ட்ரெயின் படத்தில் நடிக்கும் வெற்றிமாறன் | கமலின் ஆளவந்தான் ரீ-ரிலீஸ் : புதிய டிரைலர் வெளியானது | ஸ்ரேயா போட்டோ ஷுட்டுக்கு உதவி செய்த மகள் |
நகைச்சுவை கலந்த திரில்லர் படமாக உருவாகிறது 'ஓட விட்டு சுடலாமா'. எம்.வி.ஜிஜேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு பிரகாஷ் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேஜிக் பிரேம்ஸ் மியூசிக் சார்பில் அஸ்வின், சஞ்சீவ், ரிஜோஸ் விஏ, அனூஜ் பாபு இசையமைத்துள்ளனர். எவரி ஒன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வினித் மோகன் ,பிரகாஷ் வேலாயுதன், சதீஷ் வரிகாட்டு ஆகியோர் தயாரித்துள்ளனர்.
நாயகனாக யுகன் ராஜும் நாயகியாக பத்மா கோபிகாவும் நடித்துள்ளனர். ஜன கன மன படத்தை இயக்கிய டிஜே மிரட்டும் வில்லனாக வருகிறார். தயாரிப்பாளர் வினித் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குன் ஜிஜேஷ் கூறியதாவது: இப்படத்தின் கதைநாயகன் என்று கூறினால் ஒரு கான்டெஸா காரைத்தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு கார் ஒரு குணச்சித்திரமாகவும் படம் முழுக்கப் பயணம் செய்யும் ஒரு பாத்திரமாகவும் வருகிறது. அதற்குத் துணை போகும் பாத்திரங்களாகவே கதை மாந்தர்கள் வருகிறார்கள். படத்தின் முதல் பாதி படம் ஒரு அமானுஷ்யம் கொண்டதாகவும் இரண்டாவது பாதி நகைச்சுவை உணர்வு கொண்டதாகவும் இருக்கும்.
கதாநாயகன் ஒரு ஆட்டோ டிரைவர். அவர் நேசிக்கும் பெண்ணை ஒரு பெரிய தாதா கும்பலைச் சேர்ந்த ஒருவன் சிதைத்து விட, எந்த வித வலிமையான பின்புலமும் இல்லாத கதாநாயகன், தன்னிடம் வந்து சேரும் அமானுஷ்யம் கொண்ட ஒரு காரை வைத்துக்கொண்டு அந்தப் பெரிய தாதா கும்பலைப் பழிவாங்கப் புறப்படுகிறான். பலமிக்க வன்முறை கும்பலை எப்படி எதிர்கொண்டான் பழி வாங்கினான் என்பது தான் கதை. பரபரப்பாகவும் சிரிக்க சிரிக்கவும் கதையைக் கூறியுள்ளோம். என்கிறார்.