விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' | 2 நாட்களில் ஐந்து மில்லியன் பார்வைகளை கடந்த திரிஷாவின் ‛தி ரோடு' டிரைலர்! | 'சந்திரமுகி 2' வெளியீடு தள்ளிப் போனது ஏன் ? | ஸ்கந்தா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! | ஹாலிவுட் பட வாய்ப்பு - அட்லீ! | 7ஜி பிருந்தாவன் காலனி படத்தின் ரீ - ரிலீஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்! | கோட் சூட் லுக்கில் அஜித்தின் புதிய போட்டோ வைரல்! |
சமீப காலமாக நாகார்ஜூனா, அவரது மகன்கள் அகில், நாக சைதன்யா படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் நாக சைதன்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‛கஸ்டடி' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்த கொண்ட நாக சைதன்யாவிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:
எப்போதும் வெற்றிகரமான படத்தை கொடுக்கவே நினைக்கிறோம். ரசிகர்களின் எல்லையில்லா அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறோம். கடைசியாக வந்த சில படங்கள் வரவேற்பை பெறவில்லை. ஒரு தொழிலில் உயர்வு தாழ்வு என்பது சாதாரணமானது தான். அதன் வழியாகத்தான் நாம் பயணித்தாக வேண்டும். இதுவும் கடந்து போகும். நிச்சயமாக திரும்பி வருவோம். 'கஸ்டடி' படம் மீது நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதை வழங்குவோம் என்று நம்புகிறேன்” என்றார்.