நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை | அறிமுக இயக்குனர் டைரக்ஷனில் 365வது படத்தை அறிவித்த மோகன்லால் | 149 நாட்கள் : வார் 2 படப்பிடிப்பை நிறைவு செய்த ஹிருத்திக் ரோஷன் |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகை சம்யுக்தா மேனன். தமிழில் களரி, ஜூலை காற்றில், எரிடா படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிந்த ‛வாத்தி' படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார். அவர் தெலுங்கில் நடித்து வெற்றி பெற்ற விரூப்பாக்ஷா படம் தமிழ், மலையாளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் மலையாள புரமோசனில் கலந்து கொண்ட சம்யுக்தா தான் சாதி பெயரில் அழைக்கப்படுவதை வெறுக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: என்னுடைய சாதிப் பெயரை நான் நீக்கியது குறித்து நடிகர் ஷைன் டாம் சாக்கோ கூறியிருந்தது என்னை காயப்படுத்தியது. நான் எடுத்த முடிவு மிகவும் முற்போக்கானது. இப்போதும் சாதிப் பெயரை சேர்த்து என்னை அழைக்கும்போது வெறுப்பாக உணர்கிறேன். இன்றும் நான் மற்ற இடங்களுக்குச் செல்லும்போது இந்தப் பெயராலேயே அழைக்கப்படுகிறேன். நான் படத்தின் புரமோஷனுக்காக சென்னை சென்றபோதும் சாதிப் பெயரைச் சொல்லியே அழைத்தார்கள்.
அநேகமாக என்னுடைய இந்த முடிவு பலருக்கு புதுமையான விஷயமாக இருக்கும். ஆனால், சமூகத்தில் பலரும் இதுபோன்ற முடிவை எடுத்துள்ளனர். அதனால்தான் எனது குடும்பப் பெயரை நீக்க முடிவு செய்தேன். எனவே, அந்த முடிவு குறித்து என்னிடம் கேள்வி எழுப்பும்போது வேதனையாக இருக்கிறது. குறிப்பாக, ஷைன் டாம் சாக்கோ எனது முடிவு குறித்து அதற்கு முற்றிலும் தொடர்பில்லாத ஒன்றுடன் சேர்த்து பேசியிருப்பது வருத்ததை அளிக்கிறது” என்றார்.
சம்யுக்தா வாத்தி படத்தின் புரமோசனில் கலந்து கொண்ட போது தன்னை மேனன் என்ற சாதி பெயர் சொல்லி அழைப்பதை விரும்பவில்லை. சாதி அடையாளத்தை வெறுக்கிறேன் என்று கூறினார். சமீபத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ “நீங்கள் ஒரு மேனனாகவோ, நாயராகவோ, கிறிஸ்தவராகவோ அல்லது முஸ்லிமாகவோ யாராக வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் உங்கள் வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும். என்று சம்யுக்தாவை விமர்சித்திருந்தார். அதை குறிப்பிட்டே சம்யுக்தா இவ்வாறு பேசி உள்ளார்.