இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் | கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல... : அஜித் பேட்டி |

நெல்சன் இயக்கத்தில் நடித்து வந்த ஜெயிலர் படத்தில் தனக்கான காட்சிகளை கிட்டத்தட்ட முடித்து விட்டார் ரஜினிகாந்த். இந்த நிலையில் அப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வருவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனது மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்கப் போகிறார் ரஜினி.
விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்ததுள்ள நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்ள இருப்பதாக ஐஸ்வர்யா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகர் விஷ்ணு விஷால் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற இருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். அத்துடன் ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக அடுத்து மும்பையில் நடைபெற உள்ள லால் சலாம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள ரஜினிகாந்த் மும்பை செல்ல இருப்பது தெரியவந்துள்ளது. இந்த படத்தில் நடித்து முடித்ததும் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் ரஜினிகாந்த்.