ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா, கிருத்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ள படம் கஸ்டடி. இப்படத்தின் பிரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனால் பல மீடியாக்களை சந்தித்து பேட்டி கொடுத்து வருகிறார் நாகசைதன்யா. இந்த நிலையில், அவர் அளித்த ஒரு பேட்டியில், இதுவரை நீங்கள் எத்தனை பேருக்கு முத்தம் கொடுத்து இருப்பீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, எத்தனையோ படங்களில் இதுவரை முத்த காட்சிகளில் நடித்திருக்கிறேன். அதை எல்லாம் எப்படி கணக்கு போட முடியும். நிறைய பேருக்கு நான் முத்தம் கொடுத்து இருக்கிறேன் என்று சொல்லி அதற்கான பதிலை முடித்துக் கொண்ட நாகசைதன்யாவிடத்தில், உங்களது ரகசிய கிரஷ் யார்? என்ற கேள்விக்கு சமீபத்தில் பாபிலோன் என்ற படத்தை பார்த்தேன். அந்த படத்தில் நடித்திருந்த மார்கோராபி மிக சிறப்பாக நடித்திருந்தார். அவர் மீதும் அவரது நடிப்பு மீதும் எனக்கு கிரஷ் வந்துள்ளது என்றார் நாக சைதன்யா.