ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். நூறு நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் இறுதிவரை பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களில் ஒருவர் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது. இதை ஆரம்பத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், அதன் பிறகு நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி வந்தது. ஆனால் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு அக்டோபரில் தொடங்கி ஜனவரியில் முடித்தார்கள். இந்த நிலையில் அடுத்து தொடங்கவிருக்கும் பிக்பாஸ் சீசன்- 7 நிகழ்ச்சியை இந்த ஆண்டு ஜூன் மாதத்திலேயே தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த ஆறாவது சீசன் இறுதி நாளன்று விடைபெறும்போது மீண்டும் சந்திப்போம் என்று சொல்லிவிட்டு விடைபெற்றார் கமல்ஹாசன். அதனால் பிக்பாஸ் சீசன்-7ஆவது நிகழ்ச்சியையும் அவரே தொகுத்து வழங்குவார் என்று தெரிகிறது.