சூர்யாவின் 'கருப்பு': விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'டாக்சிக்' தெலுங்கு வியாபாரம் 120 கோடி உண்மையா? | வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் |

கடந்த 2021ம் ஆண்டு நடிகை யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் மாமல்லபுரத்தில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு காரில் சென்னை திரும்பும்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேரிகாடு அருகே கார் விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகா படுகாயத்துடன் உயிர் தப்பினார். அவரது தோழி வள்ளி பவனி ஷெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து வழக்கு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. யாஷிகா நேரில் ஆஜரானார். விசாரணைக்கு பிறகு அவர் மீண்டும் வருகிற ஜூலை மாதம் 20ம் தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் காரை ஓட்டி வந்தது யாஷிகாதான் என்றாலும் அவர் விபத்தின்போது மது அருந்தவில்லை என்று சான்றிதழ் பெற்றிருப்பதால் அவருக்கு பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கிறது.




