மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' |
கடந்த 2021ம் ஆண்டு நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான யாஷிகா ஆனந்த், மாமல்லபுரம் அருகே கார் ஓட்டி சென்றபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் நெருங்கிய தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் அவரது இரண்டு நண்பர்களும் படுகாயம் அடைந்தார்கள். அதையடுத்து சில மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில் அந்த கார் விபத்து குறித்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா விபத்து குறித்து விசாரணை நடைபெற்ற போது அதுகுறித்த விளக்கங்களை அளித்திருக்கிறார்.