பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' படம் நாளை மறுதினம் ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
இப்படத்திற்கான முன்பதிவு சில தினங்களுக்கு முன்பு ஆரம்பமானது. ஐமேக்ஸ் உள்ளிட்ட தியேட்டர்களுக்கும் முன்பதிவு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த வார இறுதிக்குள் பள்ளிகளுக்கும் தேர்வுகள் முடிவடைகிறது. வார இறுதிநாள் வரை பெரும்பாலான தியேட்டர்களில் சிறப்பான முன்பதிவு நடைபெற்றுள்ளதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திங்கள்கிழமை மே 1 விடுமுறை தினம் என்பதால் இந்த நான்கு நாட்களிலேயே படம் குறிப்பிடத்தக்க அளவில் வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தைப் பார்த்த அனைவருமே இரண்டாம் பாகத்தையும் தவறாமல் பார்ப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. முதல் பாகம் 500 கோடி வசூலைக் கடந்துள்ள நிலையில் இரண்டாம் பாகமும் அதே 500 கோடியைக் கடக்க வாய்ப்புள்ளது.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் கதையில் அதிக திருப்பங்கள் இருப்பதாலும், படம் வெளியான பின் படம் பற்றிய விவாதங்கள் அதிகமாகும் போது இன்னும் அதிகமான ரசிகர்களை படம் வரவழைக்கும் என்று தியேட்டர் வட்டாரங்களில் எதிர்பார்க்கிறார்கள்.