ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
குணசேகர் இயக்கத்தில் நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‛சாகுந்தலம்'. புராண இதிகாசமான சகுந்தலையின் வாழ்க்கையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது. சகுந்தலையாக சமந்தாவும், துஷ்யந்தனாக தேவ் மோகனும் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை. வசூலில் திணறி வருகிறது. இந்நிலையில் ஹீரோயின் அந்தஸ்ததை சமந்தா இழந்துவிட்டார் என தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டி பாபு கடுமையாக அவரை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛விவாகரத்துக்கு பின் தனது வாழ்வாதாரத்திற்காக புஷ்பா படத்தில் நடனமாடினார் சமந்தா. ஸ்டார் ஹீரோயின் என்ற அந்தஸ்தை அவர் இழந்துவிட்டார். நாயகியாக அவரது கேரியர் முடிந்துவிட்டது. மீண்டும் அவரால் நட்சத்திர அந்தஸ்தை பெற முடியாது. யசோதா படம் வெளியான சமயத்தில் கண்ணீர் விட்டு சமந்தா புரொமோஷன் செய்தார். அதேயுக்தியை சாகுந்தலம் படத்திற்கும் கையாண்டார் எடுபடவில்லை. ஒவ்வொருமுறையும் சென்ட்டிமென்ட் கை கொடுக்காது. கதையும், கதாபாத்திரமும் நன்றாக இருந்தால் மட்டுமே மக்கள் ரசிப்பார்கள். இத்தகைய மலிவான செயல்கள் எடுபடாது,'' என கூறியுள்ளார்.