காஞ்சனா 4ம் பாகத்தில் இணைந்த இளம் சீரியல் நடிகை | பாவ்னி - அமீருக்கு ஏப்., 20ல் டும் டும் | கேஜிஎப் 2வை 15 நிமிடத்துக்கு மேல் தொடர்ந்து பார்க்க முடியவில்லை : ராம்கோபால் வர்மா | எம்புரான் படத்தில் நடித்த பாலிவுட் நடிகைக்கு தினசரி மூன்று மணி நேரம் மேக்கப் | 2 வருடம் கழித்து ஓடிடியில் வெளியான மைக்கேல் படத்திற்கு வந்த சோதனை | மகேஷ்பாபுவின் மச்சினிச்சியை கிண்டலடித்த பரா கான் | இங்கிலாந்து திரைப்பட கல்லூரியில் பாடமாக எடுக்கப்பட்ட மம்முட்டியின் பிரம்மயுகம் | த்ரிஷா வீட்டிற்குப் புதிய வரவு இஸ்ஸி | தமிழில் கலக்க வரும் மராத்திய நடிகை | இளையராஜாவின் 'பேரன்பும் பெருங்கோபமும்' |
குணசேகர் இயக்கத்தில் நடிகை சமந்தா, தேவ் மோகன், அதிதி பாலன் நடிப்பில் உருவாகி உள்ள இதிகாச படமான சாகுந்தலம் நாளை ஏப்., 14ம் வெளியாகிறது. தெலுங்கில் தயாராகி பான் இந்தியா படமாக உருவாகி உள்ள இந்தப்படம் ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் வெளியாகிறது.
மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்த சமந்தா சில மாத இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். ஹிந்தியில் உருவாகும் சிட்டாடல் தொடரில் நடித்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக சாகுந்தலம் படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதன் காரணமாக சோர்வடைந்த அவர் தற்போது தனது உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டரில் 'சாகுந்தலம்' படத்திற்கான புரோமோஷன் பணிகளில் இந்த வாரம் ஈடுபட்டு உங்கள் அனைவரது அன்பையும் பெற ஆவலாக காத்திருந்தேன். ஆனால், இதன் தீவிர பணிகள் காரணமாக சோர்வு, காய்ச்சல் மற்றும் என் குரலையும் இழந்துள்ளேன். அதனால், தொடர்ந்து நடைபெற உள்ள புரோமோஷன் பணிகளில் கலந்து கொள்ள முடியாது. நீங்கள் வழக்கம்போல, உங்கள் அன்பை காண்பிக்க வேண்டும்' என கூறியுள்ளார்.