ரஜினி, கமல் எனும் இரு சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிய பாரதிராஜா | பாரதிராஜா மறைவு; முதல்வர், திரையுலகினர் அஞ்சலி | தமிழ் சினிமாவை புரட்டி போட்ட பாரதிராஜா... | இயக்குனர் பாரதிராஜா காலமானார் | அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? |

அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒதலா இயக்கத்தில் நடிகர் நானி நடிப்பில் கடந்த வாரத்தில் வெளியான திரைப்படம் தசரா. இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷூம், நடிகர்கள் சமுத்திரக்கனி, சாய் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தனர்.
எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வெளியாகி ஆறு நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடி எட்டியுள்ளதாக படக்குழு அறிவித்தனர்.
இந்நிலையில் இந்த திரைப்படம் வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் சுதாகர் செருக்குரி படக்குழுவினர் அனைவருக்கும் 10 கிராம் தங்க நாணயங்கள் பரிசாக வழங்கியுள்ளார். இதை தொடர்ந்து இப்படத்தின் இயக்குனருக்கு BMW காரை பரிசாக அளித்துள்ளார் தயாரிப்பாளர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.