தனுஷ் இயக்கும் படத்தில் இணையும் கீர்த்தி சுரேஷ் | துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா | 5 வருஷம் கழிச்சு ரொமான்டிக் படம் எடுப்பேன் : லோகேஷ் கனகராஜ் தகவல் | 20 ஆண்டுகளுக்குப் பின் காமெடி ஹாரர் படத்தில் இணையும் பிரபுதேவா - வடிவேலு | மகன்களின் கையால் ஊழியர்களுக்கு விஜயதசமி பரிசளித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | காப்பிரைட் பிரச்னை தீராமல் ரிலீஸ் செய்யக்கூடாது : மோகன்லால் பரோஸ் படம் மீது வழக்கு | நடிகையின் புகார் எதிரொலி : லப்பர் பந்து நாயகி மீது கேரள போலீசார் வழக்கு | விசாரணைக்கு ஒத்துழைக்க அடம்பிடிக்கும் நடிகர் சித்திக் : விரைவில் கைதாக வாய்ப்பு | பிரச்னையிலிருந்து வெளிவர பிசாசு நடிகைக்கு உதவிய வேட்டையன் வில்லன் நடிகர் | அந்தரங்க லீக் வீடியோவுக்கு தில்லாக பதில் அளித்த ஓவியா |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர் அபிராமி வெங்கடாச்சலம். நோட்டா, நேர்கொண்ட பார்வை, ராக்கெட்டரி, படங்களில் நடித்துள்ளார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இவர் கலாஷேத்ராவின் முன்னாள் மாணவி. தற்போது கலாஷேத்ராவில் நடந்து வரும் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் கலாஷேத்திராவுக்கு ஆதரவான கருத்துக்களை அபிராமி வெளியிட்டுவந்தார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த அபிராமி. தனக்கு மிரட்டல் வருவதாக புகார் ஒன்றை அளித்து விட்டு பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: கலாஷேத்ரா கல்லூரியில் நான் 2010ம் ஆண்டு முதல், 2015ம் ஆண்டு வரை படித்தேன். எனக்கு அங்கு யாரும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. தமிழகத்துக்கு மட்டும் அல்ல, இந்தியாவின் கலாசார பெருமையாக விளங்கும் அந்த கல்லூரியில் தற்போது நடக்கும் பிரச்சினைகள் வேதனை அளிக்கிறது.
ஹரிபத்மனிடம் நான் பாடம் கற்றுள்ளேன். எனக்கு அவர் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக அங்கு பிரச்சினை இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இப்போது இந்த பிரச்சினை திடீரென்று இவ்வளவு பெரிதாக்கப்பட்டுள்ளது. சாதி பற்றி மாணவிகளிடம் பேசுவதாக சொல்கிறார்கள். என்னிடம் யாரும் சாதி பற்றி பேசவில்லை.
இந்த பிரச்சினை இவ்வளவு பெரிதாவதற்கு அங்கு வேலைபார்க்கும் 2 பேராசிரியைகள்தான் காரணம். அந்த பேராசிரியைகள் இருவரும் என்னிடம் கூட செல்போனில் 2 முறை பேசி, ஹரிபத்மனுக்கு எதிராக பேட்டி கொடுக்க வற்புறுத்தினார்கள். அவர்கள் ஏன், இப்படி ஆள் திரட்டி பேச வைக்கிறார்கள்.
முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு ஹரிபத்மன் பாடம் நடத்தவில்லை. அவர் முதுகலை படிப்பவர்களுக்குதான் பாடம் நடத்துகிறார். ஆனால் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளை போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளனர். புகார் கொடுத்த மாணவி பற்றி நான் குறை கூற விரும்பவில்லை. அவர் கொடுத்த புகாரை பொய் புகார் என்றும் நான் சொல்லவில்லை. அது போலீஸ் விசாரணையில் உள்ளது. போலீஸ் நடவடிக்கையை நான் குறை கூறவில்லை.
கலாஷேத்ரா கல்லூரிக்கு ஆதரவாக நான் பேசினேன் என்பதற்காக என்னை சங்கி எனக் குறிப்பிடுகிறார்கள். இந்த விவகாரத்தில் மாணவிகளை சில பேராசிரியைகள் தவறாக வழி நடத்துகிறார்கள். இதில் சட்டப்படியான நடவடிக்கையை சென்னை காவல் ஆணையர் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.