ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
தான் இயக்கிய நான்கு படங்களிலேயே தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்து விட்டார் லோகேஷ் கனகராஜ். கமலை வைத்து அவர் இயக்கிய ‛விக்ரம்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று கிட்டத்தட்ட 400 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் நடிகர் விஜய்யை வைத்து லியோ என்கிற படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
அதேசமயம் விக்ரம் படத்தில் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் என்கிற கான்செப்ட்டை மையப்படுத்தி அந்த படத்தை எடுத்திருந்ததால் லியோவுக்கு அடுத்ததாக அவர் கைதி இரண்டாம் பாகத்தையோ அல்லது விக்ரம் இரண்டாம் பாகத்தையோ எடுப்பார் என்றும் அல்லது அந்த படத்தின் இறுதிக்காட்சியில் மட்டுமே வந்து கைதட்டலை அள்ளிச்சென்ற சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்குவார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ், கமல், சூர்யா மூவருமே மேடையில் ஒன்றாக தோன்றினர். அப்போது லோகேஷ் கனகராஜ் பேசும்போது, நிச்சயமாக சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவேன் என்றும் அதை 150 நாட்களில் முடிப்பேன் என்றும் கூறியுள்ளார். அதே சமயம் அது சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையப்படுத்தி உருவாகும் படமாக இருக்குமா அல்லது வேறு புதிய கதையா என்பது பற்றி அவர் குறிப்பிடவில்லை.