ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனியார் விருது வழங்கும் விழாவில் லோகேஷ் கனகராஜ் பங்கேற்றார். அப்போது ‛பிளடி ஸ்வீட்' என்றால் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், 'விக்ரம்' படத்தில் வந்த 'ஆரம்பிக்கலாங்களா' என்ற வார்த்தை போன்று 'லியோ' படத்தில் ‛பிளடி ஸ்வீட்' என வரும். படம் வரும்போது பார்த்து என்ஜாய் பண்ணுங்க .இந்த படம் பக்கா மாஸ் ஆக்ஷன் படமாக இருக்கும். முதற்கட்டமாக காஷ்மீரில் 60 நாட்கள் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இதையடுத்து இன்னும் 60 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. அத்துடன் மொத்த படப்பிடிப்பும் முடிவடையும். திட்டமிட்டபடி படம் வெளியாகும் என கூறினார்.