'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழில் வாரணம் ஆயிரம், அசல், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சமீரா ரெட்டி. திருமணம் முடிந்து குழந்தைக்கு தாயாகி உள்ள அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நான் நடிகையாக இருந்து தாயாகவும் மாறி இருக்கிறேன். உடலின் நிறத்தை வைத்தோ, தலைமுடி நரைத்து விட்டதை வைத்தோ ஒரு மனிதரை மதிப்பீடு செய்வது அநாகரிகம். வெள்ளை முடியையும், தாயான பிறகு வயிற்றின் மீது ஏற்படும் கோடுகளையும் மறைக்கும் முயற்சியை நான் எப்போதும் செய்யவில்லை, பெண்கள் ஆரோக்கியத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
சமூக வலைதளங்களில் இருக்கும் அனைத்து உணவு பிளானையும் அமல்படுத்தக்கூடாது. முதலில் நாம் நமது உடலோடு பேச வேண்டும். உடல் சொல்வதை தான் கேட்க வேண்டும். நான் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவதை பழக்கமாக்கிக்கொண்டேன். என் அப்பா டிரை புரூட்ஸ் சாப்பிட பழக்கப்படுத்தினார். நானும் என் குழந்தைகளுக்கு அதையே ருசி காட்டினேன்.
நான் ஆரோக்கியமான ஒரு வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்துக்கொண்டால் அவர்களும் அதே வழியை அனுசரிப்பார்கள். நாம் நொறுக்கு தீனியை விரும்பினால் அவர்களும் அந்த குப்பையோடு வயிற்றை நிரப்பிக்கொள்வார்கள். பெண்கள் ஆரோக்கியத்தின் மீது குடும்ப ஆரோக்கியம் சம்பந்தப்பட்டிருக்கிறது. எனவே ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.