சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், சூரி, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ மற்றும் பலர் நடித்த 'விடுதலை' படத்தின் முதல் பாகம் நேற்று வெளியானது. ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பை இந்தப் படம் பெற்றுள்ளது.
முதல் நாளிலேயே சுமார் 8 கோடிக்கும் அதிகமான வசூலை இப்படம் பெற்றுள்ளதாகச் சொல்கிறாக்ள். படத்திற்கு பத்திரிகை, இணையதங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் பரவலான விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. ரசிகர்கள் பல காட்சிகளையும், நடிகர்களின் நடிப்புக்களையும் குறிப்பிட்டுப் பாராட்டி வருகிறார்கள்.
பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படத்திற்காக சிறப்பாக இசையமைத்த இளையராஜாவுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இயக்குனர் வெற்றிமாறன் இளையராஜாவை சந்தித்து பூங்கொடுத்து கொடுத்தனர்.
படத்தில் இளையராஜாவின் இரண்டு பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.




