அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் |

ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிலம்பரசன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்து 'பத்து தல' படம் இரண்டு நாட்களுக்கு முன்பு மார்ச் 30ம் தேதி வெளியானது.
முதல் நாளில் இப்படம் 12 கோடியே 30 லட்சம் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறித்தது. நேற்று இரண்டாவது நாளிலும் 10 கோடி வரை வசூல் இருந்திருக்கலாம் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் படத்தை வெளியிட்ட வினியோகஸ்தர்களில் ஒருவரான சக்திவேல் படம் மாபெரும் வெற்றி என்று சொல்லி சிம்பு மற்றும் படக்குழுவினரை சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 'பத்து தல' படத்திற்குக் கடும் போட்டியாக 'விடுதலை' படம் இருப்பதால் 'பத்து தல' குழுவினர் படத்தைப் பற்றி அடிக்கடி ஏதாவது ஒன்றை செய்து பிரபலப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.