ஜுன் 9ம் தேதி லாவண்யா திரிபாதி, வருண் தேஜ் திருமண நிச்சயதார்த்தம் | “பொன்னியின் செல்வன்” தந்த பொற்கால வெள்ளித்திரை இயக்குநர் மணிரத்னம் | பண்ணைபுரம் முதல் பாராளுமன்றம் வரை “இசைஞானி” இளையராஜா. | மாமன்னனே கடைசி : நல்ல படமாக அமைந்தது திருப்தி - உதயநிதி | தேவர் மகனுக்குப் பிறகு எனக்கு அருமையான படம் : வடிவேலு | 'ஜெயிலர்' படப்பிடிப்பு நிறைவு, கேக் வெட்டி கொண்டாட்டம் | வளர்ந்து வரும் நடிகருக்கு ஜோடியாகும் தமன்னா | விஜய்க்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்? | கமலின் 234 வது படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது | தங்கலான் படத்திற்காக பல பயிற்சிகளை பெற்ற மாளவிகா மோகனன் |
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விடுதலை' . நேற்று திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தின் ரிலீஸ்க்கு முன்பே வெற்றிமாறன் தன் உதவி இயக்குனர்கள் 25 நபர்களுக்கு ஆளுக்கு ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்வித்தார்.
இந்நிலையில் விடுதலை படத்தில் பணிபுரிந்த அத்தனை நபர்களுக்கும் தங்க நாணயத்தை பரிசாக இன்று வெற்றிமாறன் வழங்கியுள்ளார். தொடர்ந்து வெற்றிமாறன் செய்யும் நற்செயல்களால் நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.