சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் | மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் |
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சந்திரமுகி 2. இத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கங்கனா ரணவாத், லட்சுமி மேனன், வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது வடிவேலுக்கும், பி.வாசுவுக்கும் கருத்துவேறுபாட்டால் மோதல் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பில் வடிவேலுவை வாசு கடுமையான வார்த்தைகளில் திட்டினார் என செய்திகள் இணையதளங்களில் பரவின. இந்நிலையில் இதுபற்றி இப்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இருவருக்கும் எந்த மோதலும் ஏற்படவில்லை. மைசூர், ஐதராபாத், மும்பை உட்பட பல இடங்களில் நடந்த படப்பிடிப்பில் வடிவேலு கலந்து கொண்டு முடித்துக் கொடுத்துவிட்டார். 'சந்திரமுகி-2' படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்கிறார்கள்.