மாஸ்டர் 2ம் பாகத்தை விரும்பும் லோகேஷ் | ராம் பொத்தினேனி படத்தில் உபேந்திரா | இளையராஜா படத்தை மிஸ் செய்த கார்த்திக் சுப்பராஜ் | பென்ஸ் படம் பூஜையுடன் துவங்கியது | தோனி குறித்து நெகிழ்ந்த மீனாட்சி சவுத்ரி | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் தண்ணீருக்கடியில் அதிரடி சண்டைக்காட்சி | நம் வீரம் மிகுந்த ராணுவத்தை வணங்குகிறேன் : கமல் | ரஜினி நினைக்கும் விஷயம் | விக்னேஷ்சிவன், நயன்தாரா ஊடலா? | திருநெல்வேலியில் சிம்ரன் பேசியது ஏன்? |
கடந்த 2010ல் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான படம் தபாங். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து சல்மான்கானின் மார்க்கெட் இன்னும் கமர்சியலாக உருவெடுத்தது. இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார் நடிகர் சோனு சூட். படத்தில் அவரது வில்லன் நடிப்புக்கு பாராட்டுக்களும் குவிந்தன. அதேசமயம் அந்த படத்தின் கதை தன்னிடம் வந்தபோது அதில் தனது கதாபாத்திரம் குறித்து கேட்டதுமே அந்த படத்தில் நடிக்க முடியாது என முதலில் மறுத்துவிட்டாராம் சோனு சூட்.
காரணம் அந்த கதாபாத்திரம் ரொம்பவே முரட்டுத்தனமாக இருந்ததாம். பின்னர் அந்தக்கதையில் தனது கதாபாத்திரத்தையும் அது குறித்த சில காட்சிகளையும் தானே மாற்றி எழுதியதாகவும், அதன் பின்னரே அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசும் போது ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார் சோனு சூட். இந்த படம் தமிழில் சிம்பு நடிப்பில் ஒஸ்தி என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டபோது அதிலும் வில்லனாக சோனு சூட்தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.