டுவிட்டர் சாட்டிங்கில் வந்தியத்தேவனும், குந்தவையும்… | ஒரு பாட்டுக்கு ஆடிய ஆர்யா மனைவி சாயிஷா | நயன்தாராவின் 75வது படம் தொடங்கியது | அயோத்தி வெற்றி : இயக்குனருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சசிகுமார் | ராணி முகர்ஜி படத்திற்கு நார்வே எதிர்ப்பு | காமெடி நடிகர் மீது பாலியல் புகார் | 1500 கோடி சொத்தை சுருட்டவே 2வது திருமணம் : பவித்ராவின் முன்னாள் கணவர் குற்றச்சாட்டு | இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளில் வெளியாகும் 'காந்தாரா' | அன்பே மகிழ்ச்சி, மகிழ்ச்சியே அன்பு - விக்னேஷ் சிவன் | 'பத்து தல' - சிம்பு பட டிரைலர்களில் புதிய சாதனை |
பாலிவுட் நடிகரான சமீர் கக்கார் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 71. 1985ல் இருந்து தொடர்ந்து நடித்து வந்த இவர், தொலைக்காட்சி சீரியல் மற்றும் வெப் சீரிஸ் ஆகியவற்றிலும் நடித்துள்ளார். 1987ல் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் டைரக்சனில் கமல், அமலா இணைந்து நடித்த, கன்னடத்தில் உருவான புஷ்பக விமான(ம்) என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்தப் படத்தில் கமல் ஒருவரை கடத்தி வந்து தனது அறையில் வைத்து விதவிதமான சித்தரவதைகள் செய்வாரே, அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் இந்த சமீர் கக்கார். வசனங்களே இல்லாமல் உருவாகியிருந்த இந்த படம் தமிழில் பேசும் படம் என்கிற பெயரில் வெளியானது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஜய்சேதுபதி நடிப்பில், ஹிந்தியில் வெளியான பார்சி என்கிற வெப் சீரிஸில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் சமீர் கக்கார் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.