சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? |
காமெடி நடிகரான சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் முதன்முறையாக ஹீரோவாக நடித்துள்ள படம் ‛விடுதலை'. இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இந்த படத்தின் முதல்பாகம் இம்மாதம் இறுதியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அடுத்தப்படியாக ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். 'கூழாங்கல்' படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கும் இந்தபடத்திற்கு "கொட்டுக்காளி" என பெயரிட்டுள்ளனர். சூரிக்கு ஜோடியாக மலையாள நடிகையான அன்னா பென் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் தனது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.
சிவகார்த்திகேயன் கூறும்போது, “ஒரு படைப்பாளி தன்னுடைய சொந்த மண்ணின் கூறுகளை அதன் தன்மை மாறாது படமாக்கித் தந்து அது சர்வதேச அளவுகளில் அங்கீகாரம் பெறுவது திரைப்படத்துறையின் விலைமதிப்பற்ற தருணம். அந்த வகையில், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் மதிப்புமிக்க 'டைகர் அவார்ட்' வென்று, 'கூழாங்கல்' திரைப்படத்தின் மூலம் நம் தமிழ்த் திரையுலகைப் பெருமைப்படுத்திய இயக்குநர் பி.எஸ் வினோத்ராஜ் ஒரு ஜெம் என்று சொல்வேன். எனது நெருங்கிய நண்பரான சூரியுடன் இந்தப் படத்தில் பணிபுரிவது எனக்கு உற்சாகமான விஷயம். மேலும், அன்னா பென் போன்ற திறமை மிக்க நடிகை எங்கள் படத்தில் இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் கூறும்போது, “திரைப்படத்துறையில் அனுபவம் மிக்கவர்களுடன் பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயனுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சூரி மற்றும் அன்னா பென் போன்ற மிகவும் திறமையான நடிகர்களுடன் பணியாற்றுவது உற்சாகமாக இருக்கிறது" என்றார்.