பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
சமூக வலைத்தளங்களில் நடிகைகள் பலரும் அவர்களது விதவிதமான புகைப்படங்களைப் பதிவிடுவது வழக்கம். சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகள், டிவி நடிகைகள், டிவி தொகுப்பாளர்கள் என பலரும் விதவித ஆடைகளில், விதவித புகைப்படங்களை வெளியிட்டு 'லைக்ஸ்'களை அள்ளுவார்கள்.
முன்னணி நடிகைகள் என்றால் சில பல லட்சங்களுக்கு லைக்ஸ் வரும். புகைப்படங்களைப் பதிவிடும் போது தரமாக எடுக்கப்பட்ட, அழகான புகைப்படங்களை மட்டுமே அனைவரும் பதிவிடுவார்கள். ஆனால், முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் நேற்று சில மோசமான தரத்தில் எடுக்கப்பட்ட 'அவுட் ஆப் போகஸ்' புகைப்படங்களைக் கூடப் பதிவிட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் பலரும், “மோசமான புகைப்படங்கள், மோசமான போட்டோகிராபர்,” என அதைப் பற்றி விமர்சித்து கமெண்ட் போட்டிருந்தார்கள். இருந்தாலும் அந்தப் புகைப்படங்களுக்கும் ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் வந்திருப்பதுதான் ஆச்சரியம்.