என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தமிழில் கீர்த்தி சுரேஷ் வெற்றி கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தெலுங்கில் தசரா உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்தார். மகாநடிகை கூட தெலுங்கு பட கணக்கிலேயே வருகிறது. அவர் நடித்த சில படங்கள் தியேட்டரில் வராமல் ஓடிடியில் வந்தன. இந்நிலையில் தமிழில் ஒரு வெற்றிக்காக காத்திருக்கிறார்.
தமிழில் அவர் நடித்த அண்ணாத்த, சைரன் உள்ளிட்ட படங்கள் ஓடவில்லை. அதனால், சமீபகாலமாக அவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் கவனம் செலுத்துகிறார். அப்படி வந்த மிஸ் இந்தியா, சாணிக்காயிதம், ரகு தாத்தா, போன்ற படங்களும் பேசப்படவில்லை. இப்போது அவர் ரிவால்வர் ரீட்டா படத்தை மலை போல நம்பியிருக்கிறார்.
ஆண் துணை இல்லாத வீட்டில் உள்ள பெண்களுக்கு 2 கேங்ஸ்டர் டார்ச்சர் கொடுக்கிறார்கள். அவர்களை கீர்த்தி சுரேஷ் என்ன செய்கிறார் என்பது கதை. கீர்த்தி சுரேஷ் அம்மாவாக ராதிகாவும், வில்லனாக புஷ்பா சுனிலும் நடித்து இருக்கிறார்கள். வித்தியாசமான கதைக்களம் என்பதால் இந்த படம் ஹிட்டாகும், தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என கீர்த்தி நினைக்கிறாராம்.
நவீன சரஸ்வதி சபதம் என்ற படத்தை இயக்கிய சந்துரு தான் ரிவால்வர் ரீட்டாவை இயக்கி இருக்கிறார். இந்த மாத இறுதியில் ஆக., 27ல் படம் ரிலீஸாகிறது.