
‛சக்தித்திருமகன் ரிலீஸ் தேதி மாற்றம்
விஜய் ஆண்டனி நடித்த மார்கன் பெரிய ஹிட் ஆகவில்லை என்றாலும் ஓரளவு வரவேற்பை பெற்றது. அடுத்த சில மாதங்களில் அவர் நடித்த சக்தித்திருமகன் ரிலீஸ் என அறிவித்தார்கள். ‛அருவி" அருண் பிரபு இயக்கிய அந்த படம், செப்டம்பர் 5ல் ரிலீஸ் என்றார்கள். இப்போது ரிலீஸ் தேதியில் சின்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 19ல் சக்தித்திருமகன் ரிலீஸ் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசியல் பின்னணி உடைய கதையாக சக்தித்திருமகன் உருவாகி உள்ளது. இந்த படத்துக்குபின், சசி இயக்கத்தில் தான் நடிக்கும் பிச்சைக்காரன் 2வில் கவனம் செலுத்துகிறார் விஜய் ஆண்டனி.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!